கோவை : யாருக்கு வாக்களிக்க போறீங்க எனக் கேள்வி கேட்டு கமல்ஹாசன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், உங்களது அறிவுரையை ஏற்று தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதாக ரசிகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கோவை : யாருக்கு வாக்களிக்க போறீங்க எனக் கேள்வி கேட்டு கமல்ஹாசன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில், உங்களது அறிவுரையை ஏற்று தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கப் போவதாக ரசிகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் நேற்று பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தகுதியே இல்லாத தலைவர்கள் ஆளும் இந்த நாட்டில் யாருக்கு வாக்களிக்க போறீங்க...? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், அவரது கேள்விக்கு பதில் அளித்து சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், உங்களது அறிவுரையை ஏற்று எங்களது தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் தொல். திருமாவளவனுக்கு வாக்களிக்கப் போவதாக ரசிகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவு பின்வருமாறு :- அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய அண்ணன் கமல் அவர்களின் உண்மையான ரசிகன் நான்.. நடிப்பிற்காக மட்டுமல்ல, திரையிலும், நிஜத்திலும் மரபுகளை உடைக்க நினைக்கும் கலைஞன், மற்றவர்கள் என்ன நினைத்தால் என்ன தனக்கு சரியென்று படுவதை செய்யும் துணிச்சல்காரன். ரசிகர் மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக மடைமாற்றம் செய்தவன். அவரைப் பார்த்துதான் 18 முறை இரத்த தானம் செய்துள்ளேன். உடல்தானம் செய்துள்ளேன். புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் மகிழ்ச்சிதான், அந்த வகையில் அண்ணன் கமல் அவர்களுக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் என் வாழ்த்துகள்...
அண்ணன் கமல் சொன்னது போல யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதில் நானும், எங்கள் குடும்பமும் தெளிவாகவே இருக்கிறோம். பாசிச_பா.ஜ.க. கூட்டணிக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது என்பதில்......
அனிதா இறந்த போது "திருமாவளவன்" இதை சும்மா விடக்கூடாது, தாங்கள் கூறிய அதே திருமாதான் எங்கள் தொகுதியின் வேட்பாளர். மத்திய அரசிடம் நீட் விலக்கு என்பதை நிர்பந்திக்கும் வல்லமை கொண்ட கட்சி, சமூக நீதி நிலைநாட்டும் கட்சி, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காத கட்சி, தற்போதைய சூழலில் தமிழகத்தின் குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரே கட்சி தி.மு.க. மட்டுமே.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகளின் வலியுறுத்தலின் காரணமாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, எங்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது. ஆதலால், எங்களின் வாக்கு தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் தலைவர் திருமா (தலைவர் என்ற பதத்திற்கு முழு தகுதியுடையவர்) அவர்களுக்கே... என்றும் கமல்_ரசிகன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.